search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் தொகுப்பு"

    • தளபதி பேரவை தலைவர் ஏ.ஆர். அருள்காந்த் நன்றி தெரிவிப்பு
    • பொதுமக்கள் வரவேற்பதாக அறிக்கையில் தகவல்

    திருவண்ணாமலை:

    தளபதி பேரவை தலைவர் ஏ.ஆர்.அருள்காந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழர்களின் திருநாளாம் தை பொங்கலை தமிழகம் முழுவதும் விவசாயிகளின் உற்சாகமாக கொண்டாடும் வேலையில் பொங்கல் தொகுப்பில் கரும்பு விடுபட்டு இருந்தது இதை அரசியல் ஆக்க வேண்டும் என துடித்து ஜனவரி 2ம் தேதி திருவண்ணாமலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்தது சென்னை உயர்நீதி மன்றத்திலும் கரும்பு வழங்க வேண்டும் என ஒரு பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அனைத்தையும் முறியடித்து விவசாயிகளின் பொதுமக்களின் நலம் கருதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரும்பு வழங்கப்படும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருப்பது அனைத்து தரப்பிலும் வரவேற்பையும் வாழ்த்துகளையும் பெற்று இருக்கிறது. முதல்-அமைச்சருக்கு தளபதி பேரவை சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை எழும்பூரில் அனைத்து மாவட்ட விவசாயிகளையும் ஒன்றிணைத்து காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது.
    • சென்னை எழும்பூரில் அனைத்து மாவட்ட விவசாயிகளையும் ஒன்றிணைத்து காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது.

     பல்லடம்:

    பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டி வரும் 31-ந் தேதி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகையில் கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சாலை மறியல் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன் பல்லடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:- தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில்கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பன்னீர் கரும்பை கொள்முதல் செய்து பொங்கல் பரிசுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கிட கோரி‌ தமிழ்நாடு அரசிற்கு விவசாயிகள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி நேற்று சென்னை எழும்பூரில் அனைத்து மாவட்ட விவசாயிகளையும் ஒன்றிணைத்து காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது.

    இதன் தொடர்ச்சியாக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் பன்னீர் கரும்பை வழங்க உத்தரவு பிறப்பித்தார். இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் , வேளாண்துறை அமைச்சருக்கும், விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்வருக்கு எடுத்துச்சென்ற கூட்டுறவுத்துறை செயலாளருக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    அடுத்த ஆண்டு முதல் இரண்டு கரும்புகளை வழங்கி கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட அரசு உதவ வேண்டும் .நெல்லை கொள்முதல் செய்வது போலவே பன்னீர் கரும்பையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் .மேலும் கரும்பை கொள்முதல் செய்து விநியோகம் செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டதால் வரும் 31ந்தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொங்கல் தொகுப்புடன் கரும்பு, வெல்லம் உள்ளிட்டவைகளை வழங்கக்கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • அந்த விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த பொங்கல் தொகுப்புடன் கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகிய பொருட்களை வழங்க வேண்டும்.

    மதுரை

    தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் கார்டுதாரர்களுக்கு ரொக்கம் ரூ.1000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சீனி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு வழங்கமாக வழங்கப்பட்டு வந்த கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் இந்த ஆண்டு வழங்கப்பட வில்லை.

    இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. பொங்கல் தொகுப்புடன் கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை வழங்க கோரி இன்று மாநிலம் முழுவதும் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

    பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

    மதுரையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு மாநகர் மாவட்ட பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில விவசாய அணி செயலாளர் செந்தூர் பாண்டியன் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர்கள் சுசீந்திரன் (மாநகர்), சசிக்குமார் (மேற்கு), ராஜ சிம்மன் (கிழக்கு) ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சுசீந்திரன் பேசியதாவது:-

    திராவிட மாடல் அரசு என்று ஆட்சி நடத்தும் தி.மு.க.வுக்கு விவசாயிகள் நலனில் அக்கறை இல்லை. டாஸ்மாக் வியாபாரத்தில் கவனம் செலுத்தும் இந்த அரசு, விவசாயிகளை பாதுகாக்க தவறி விட்டது.

    மத்திய அரசு வழங்கும் உதவி தொகையை பெற்று விவசாயிகள் இந்த ஆண்டு கரும்பு விவசா யம் செய்துள்ளனர். அந்த விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த பொங்கல் தொகுப்புடன் கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகிய பொருட்களை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல், நிர்வாகிகள் ராஜரத்தினம், சோலை மணி கண்டன், வினோத்குமார், ராஜா, ஏர்போர்ட் கார்த்திக், கீரைத்துறை குமார், மீனா இசக்கி, மணிமாலா, தமிழ்செல்வி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
    • இதற்காக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்கு ரூ.500 மதிப்புள்ள இலவச பொங்கல் தொகுப்பை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பச்சரிசி, வெல்லம், உளுந்து, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசி பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட 10 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

    இதுபற்றி பேசிய புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைவில் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.

    • 3,589 பொங்கல் தொகுப்புகள் மீதம்.
    • 4,39,395 ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ.23 கோடியே 51 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 708 ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம் 4,50,709 அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

    பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து அரிசி பெறும் ரேசன் அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட 21 வகையான பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பு பொருட்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள 4,39,395 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.23 கோடியே 51 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கியது போக மீதமிருந்த 3,589 மளிகைத்தொகுப்பு பொருட்கள் ஆதரவற்ற இல்லங்கள் மற்றும் காப்பகங்களுக்கு வழங்கப்பட்டது.

    ×